இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வாரம்

மின்னணு மற்றும் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நாளை (05) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை குறித்த வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமைந்துள்ள 653 தபால் அலுவலகங்களில் மின்னணு மற்றும் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை, காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தங்களது மின்னணு மற்றும் இலத்திரனியல் கழிவுகளை தபால் அலுவலகங்களில் ஒப்படைக்க முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார்.

Sun, 10/04/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை