உலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா

உலகில் 10இல் ஒருவருக்கு கொவிட்–19 தொற்று பரவி இருக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டின்படி உலகின் மிகப் பெரும்பான்மையான மக்கள் அச்சுறுத்தலில் இருப்பாத உலக சுகாதார அமைப்பு தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 மில்லியனாக இருந்தபோதும், இதன் உண்மையான எண்ணிக்கை 800 மில்லியனை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையை விடவும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.

நோய்த் தொற்றை சர்வதேச அளவில் கையாள்வது குறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்திலேயே இந்தக் கூட்டம் கடந்த திங்களன்று இடம்பெற்றது.

இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு பத்து மாதங்களை தொட்டிருந்தபோதும் அது முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞைகள் குறைவாகவே காணப்படுகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து பல நாடுகளிலும் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட்டுள்ளதோடு அது சில நாடுகளில் முன்னரை விடவும் தீவிரம் அடைந்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 10 வீதத்தினர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாய் மதிப்பிடப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகாலத் திட்டங்களுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக் ரியான் தெரிவித்தார்.

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை