Header Ads

தீர்க்கமான புளோரிடா மாநிலத்தில் டிரம்ப், ஜோ பைடன் தீவிர பிரசாரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஜனநாயகக் கட்சி போட்டியாளரான ஜோ பைடன் தீர்க்கமான மாநிலமான புளோரிடாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு ஆதரவாளர்களிடம் உரையாற்றிய பைடன், “உங்களிடமே அதிகாரம் உள்ளது. நீங்கள் நீலமாக மாறினால் (ஜனநாயகக் கட்சி) போதுமானது” என்றார்.

எனினும் குறியரசுக் கட்சியின் டிரம்ப், “அவர் உங்களை சிக்கவைக்கப்பார்க்கிறார்” என்று தனது போட்டியாளர் பற்றி எச்சரித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் கருத்துக் கணிப்புகளில் தேசிய அளவில் பைடன் ஸ்திரமான முன்னிலை ஒன்றை பெற்றுள்ளார்.

எனினும் புளோரிடா போன்ற தீர்க்கமான மாநிலங்களில் இன்னும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த மாநிலங்களின் முடிவே வெள்ளை மாளிகைக்கு தேர்வு செய்யப்படுபவர் யார் என்பதில் தீர்மான சக்தியாக அமையவுள்ளது.

81 மில்லியன் பேர் ஏற்கனவே தமது வாக்கை அளித்திருப்பதோடு அதில் 52 மில்லியன் பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இது முன்னர் காணாத அளவு முன்கூட்டிய வாக்களிப்பாக உள்ளது.

குறிப்பாக புளோரிடா டிரம்ப் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய மாநிலமாக இருப்பதோடு கருத்துக் கணிப்புகளின்படி அவர் பைடனிடம் 1.4 புள்ளிகளால் பின்தங்கியுள்ளார்.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.