எவடொப் கிங்ஸ் அணி சம்பியன்

அட்டாளைச்சேனை தைக்கா நகர் எவடொப் விளையாட்டுக் கழகத்தின் 2020ம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் பிரிமியர் லீக் சம்பியனாக எவடொப் கிங்ஸ் அணி தெரிவானது.

எவடொப் விளையாட்டுக் கழகத்தின் 2020ம் அண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் பிறிமியர் லீக் போட்டிகள் தைக்கா நகர் ஸஹ்ரா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்குஸ் எவடொப் கிங்ஸ் அணியும், எவடொப் ஹீரோஸ் அணியும் தெரிவானது. அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக அமைந்த இச்சுற்றுப்போட்டியில் 3 அணிகள் பங்குபற்றியது.

இதில் இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற எவடொப் ஹீரோஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹீரோஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் சிராஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் ஏ.எம்.சரப் 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

வெற்றி பெறுவதற்கு 48 ஓட்டங்களைப் பெற பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய எவடொப் கிங்ஸ் அணி 9.4 பந்துவீச்சு ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.

எவடொப் கிங்ஸ் அணி சார்பாக பவாஸ் 20 ஓட்டங்களையும்,கூடுதலாகப் பெற்றுக்கொடுத்தார்.. பந்துவீச்சில் றிஸ்லத் 2 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

2 பந்துகள் மீதமிருக்க எவடொப் கிங்ஸ் அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று 2020ம் ஆண்டுக்கான பிறிமியர் லீக் சம்பியனாக தெரிவாகியது.

இறுதிப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், எவடொப் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான ஏ.எல்.அஜ்மல் சம்பியன் அணியான எவடொப் கிங்ஸ் அணிக்கான கிண்ணத்தை வழங்கி வைத்ததுடன் ரன்னர்அப் ஆக தெரிவான எவடொப் ஹீரோஸ் அணிக்கான கிண்ணத்தை கழகத்தின் செயலாளர் யு.எல்.எம்.சௌஜான் வழங்கி வைத்தார்.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக எவடொப் கிங்ஸ் அணியின் பவாஸ் தெரிவானதுடன் தொடரின் சிறந்த வீரராக எவடொப் லெஜன்ட் அணியின் ஏ.எல்.அஜ்மல் தெரிவானார். தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக எவடொப் கிங்ஸ் அணியின் ஏ.எம்.சரப் தெரிவானதுடன் தொடரின் சிறந்த துடுப்பாட்டக்காரராக எவடொப் கிங்ஸ் அணியின் எம்.ஐ.பாஸி தெரிவானார்.

அட்டாளைச்சேனை விசேட நிருபர்

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை