தென், சப்ரகமுவவில் அவ்வப்போது மழை

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sun, 10/04/2020 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை