Header Ads

தேர்வாளர் பதவியிலிருந்து மிஸ்பா விலகல்

பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றார்.

மிஸ்பா உல் ஹக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், அந்நாட்டின் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராகவும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயற்பட்டு வந்திருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொண்டுவந்திருக்கும் புதிய கொள்கைகளின் அடிப்படையிலேயே அவருக்கு தேர்வுக் குழு தலைவர் பதவியில் நீடிக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்ந்தும் நீடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. தான் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து மிஸ்பா உல் ஹக், இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். “எனக்கு விருப்பத்திற்குரியது களத்தில் வேலை செய்வதாக இருக்கின்றது. எனவே, அதுவே நான் இந்த முடிவு எடுப்பதற்கு காரணம். நான் வீரர்களுடன் இணைந்து பணிபுரிவதனை விரும்புகின்றேன்.”

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிஸ்பா உல் ஹக்கின் ஆளுகைக்குள் வந்த பின்னர் இரண்டு நாடுகளுக்கு எதிரான சர்வதேச தொடர்களிலேயே ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மிஸ்பா உல் ஹக் பதவி விலகியிருக்கும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் சபை புதிய தேர்வுக் குழு தலைவர் தொடர்பில் எந்த அறிவிப்புக்களையும் இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.