உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டியில் ஏறாவூர் லக்கி ஸ்டார் வெற்றி

காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப் போட்டி கடந்த மூன்று தினங்களாக இடம் பெற்று (20.09.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதிப் போட்டி இடம் பெற்றது.

20 கழகங்கள் பங்கு பற்றிய இச் சுற்றுப் போட்டியில் ஏறாவூர் லக்கி ஸ்டார் கழகத்துக்கும் காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக்கழகத்துக்குமிடையில் இறுதிப் போட்டி இடம் பெற்றது.

இதில் ஏறாவூர் லக்கி ஸ்டார் கழகம் 4:0 கோல்கள் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இதன் பரிசளிப்பு வைபவத்தில் காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எம்.ஜலீல், செயலாளர் எம்.ஏ.இன்சாப் அலி, பொருளாளர் ரமீஸ் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.அன்சார் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழக தலைவர் எம்.ஜாபீர் உட்பட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், காத்தான்குடி உதைபந்தாட்ட சங்கத்தின் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை