ஜப்பான் கராத்தே தோ சம்மேளனத்தின் அங்கத்துவம்

கராத்தே பிரதம ஆசிரியர் அன்ரோ டினேஷ் ஜப்பான் கராத்தே தோ சம்மேளனத்தின் (JKF) அங்கத்துவத்தை பெற்றுள்ளார்.

அன்ரோ டினேஷ் , ஜப்பானில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் பங்குபற்றியும் , சுற்றுப்போட்டியில் கராத்தே நடுவராகவும் கடமையாற்றியும் உள்ளார்.

2013 ஆம் ஆண்டுமுதல் ஆறு தடவைகள் ஜப்பானுக்குச் சென்று உயர்தர பயிற்சிகளை நேரடியாகப் பெற்று ஜப்பானிய டான் தர டிப்ளோமா தேர்வுகளிலும் சித்தி அடைந்துள்ளார்.

இதன் பின்னரே

ஜப்பான் கராத்தே தோ சம்மேளனம் (JKF) மற்றும் ஜப்பான் கராத்தே சோட்டோகான் சம்மேளனத்தின் (AJKS) அங்கத்துவம் கிடைத்துள்ளது.

பிரதம ஆசிரியர் அன்ரோ டினேஷ், மலேஷியா, ஜப்பான், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கராத்தே உயர் பயிற்சிகளை பெற்றுள்ளதோடு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கராத்தே போட்டிகளில் பங்குபற்றிய தோடு கராத்தே நடுவராகவும் கடமையாற்றியுள்ளார்.

அன்ரோ டினேஷ், தேசிய கராத்தே மத்தியஸ்தர் மற்றும் நடுவராகவும் உள்ளதோடு சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனலின் பிரதம ஆசிரியராகவும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேஷன் இன்டர்நேஷனல் அமைப்பின் வெளிவிவகார பணிப்பாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை