Header Ads

கொரோனா பற்றிய டிரம்பின் பதிவை நீக்கியது பேஸ்புக்

கொவிட்–19 தொற்று காய்ச்சலை விடவும் உயிராபத்துக் குறைந்தது என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதிவை பேஸ்புக் நீக்கியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் டிரம்ப் மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகை திரும்பினார்.

அதன் பின் அவர் பேஸ்புக்கில் பதிவிட்டதாவது, “காய்ச்சல் பருவத்தில் நாம் வாழப் பழகியது போல் கொவிட் உடனும் வாழப் பழக வேண்டும். அது அதிக மக்களிடம் உயிராபத்து இல்லாததாக உள்ளது.”

விதி மீறல் எனக் கூறி இந்தப் பதிவை பேஸ்புக் நீக்கியுள்ளது. எனினும் இந்தப் பதிவை ட்விட்டர் சமூக ஊடகம் நீக்கவில்லை. ஆனால் இந்த செய்தி “தவறான வழிநடத்தல் என்றும் பாதகமான தகவலாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றின் சரியான உயிரிழப்பு வீதம் தெரியாதபோதும் அது பெரும்பாலான காய்ச்சல் நோய்களை விட பத்து மடங்கு அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழம் குறிப்பிட்டுள்ளது.

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.