Header Ads

ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடு அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு போராடி வருகின்றன.

செக் குடியரசில் பாடசாலைகள், மதுபானக் கடைகள் மற்றும் இரவு விடுதிகள் மூடப்பட்டு மூன்று வாரத்திற்கு பகுதி அளவு முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் 100,000 பேருக்கு அதிக நோய்த் தொற்று வீதம் பதிவாகி இருக்கும் செக் குடியரசில் உணவகங்கள் மூடப்பட்டு பொது இடங்களில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்திலும் பகுதி அளவு பொது முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டு, பொது உட்புற இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பல நாடுகளில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மருத்துவமனைகளில் அடுத்த வாரம் இறுதியாகும்போது அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 90 வீதம் நிரம்பக் கூடும் என்று பொது வைத்தியசாலைக் குழுவின் தலைவர் மார்டின் ஹர்ஷ் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கும் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் வெளியிடவிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி பாரிஸ் உட்பட வைரஸ் தொற்று மையம் கொண்டிருக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மிகுந்த கவலையுடன் நிலைமையை அவதானித்து வருதாக ஜெர்மனி சான்செலர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

“நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதை நான் கூறிக்கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்றுத் தொடக்கம் மதுபானக் கடைகள் மற்றும் விடுதிகள் மூடப்படுகின்றன.

ஐரோப்பாவில் கடந்த வாரம் 700,000 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது இந்த பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் பதிவான மிக அதிக எண்ணிக்கை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.