திருடிய அரும்பொருட்களை கொடுத்த சுற்றுலாப் பயணி

இத்தாலியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான பொம்பேயிலிருந்து தாம் திருடிய கலைப்பொருட்கள், சபிக்கப்பட்டவை எனக் கூறி சுற்றுலாப் பயணி ஒருவர் அவற்றைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

“தயவு செய்து அவற்றைத் திருப்பி எடுத்துக்கொள்ளுங்கள். அவை கெட்ட சகுனத்தைக் கொண்டு வருகின்றன” என்று எழுதப்பட்ட கடிதத்துடன் 2 தரையோடுகள், பீங்கான் பகுதி ஒன்றை அனுப்பியுள்ளார்.

2005ஆம் ஆண்டில் பொம்பேய் நகருக்குச் சுற்றுலா சென்றபோது, அவர் அந்தப் பொருட்களைத் திருடி எடுத்துச் சென்றார்.

ஆனால், அதிலிருந்து 2 முறை மார்பகப் புற்றுநோய், நிதி நெருக்கடி எனத் துயரங்கள் தன் வாழ்க்கையைத் தொடர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். பொம்பேயில் திருடப்பட்ட பொருட்கள், வருத்தத்தோடு திருப்பி அனுப்பப்படுவது இது முதல் முறை அல்ல.

அவ்வாறு திருப்பி கொடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அந்த நகர அதிகாரிகள் ஓர் அருங்காட்சியகமே அமைத்துள்ளனர்.

எரிமலை வெடிப்பு காரணமாக கி.பி 79இல் எரிமலைச் சாம்பலில் புதையுண்ட பழமையான பொம்பேய் நகரம் 16ஆவது நூற்றாண்டில்தான் அகழ்ந்து எடுத்து அடையாளம் காணப்பட்டது.

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை