Header Ads

உலகில் ஒரே நாளில் அரை மில்லியனுக்கு கொரோனா

உலக அளவில் கடந்த வியாழக்கிழமை மட்டும் புதிதாக 500,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்–19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 25 வீதமாக அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணி க்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்துள்ளது.

உலக அளவில் 44.7 மில்லியன் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.17 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 8.9 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 228,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.