பின்மின் நிறுவன முதலாவது புட்சல் போட்டி

பின்மின் நிறுவனத்தினால் முதல் தடவையாக புட்சல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பேலியகொட ஸ்போர்ட்ஸ் வேல்ட் உள்ளக அரங்கில் பின்வின் குறூப் நிறுவனத்தின் தரநிர்ணய பகுதியின் பணிப்பாளர் றிஷாட் பளீல் தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 24 கம்பனிகளின் அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் அஸ்டெக் பாத் டச் தனியார் கம்பனி அணி 2க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் அப்துல்லா ரேடர்ஸ் அணியை வென்று சம்பியன் கிண்ணத்தையும் 60000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டது. 25000 ரூபா பணப்பரிசை அப்துல்லா ரேடர்ஸ் அணி பெற்றுக் கொண்டது. இதன்போது குறூப் பணிப்பாளர் தாஹா மக்பூல் பின்வின் எடூ கெம்பஸ் தலைவர் பஷீன் முஸ்தபா உள்ளிட்ட நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Sat, 10/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை