Header Ads

இத்தாலியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை இத்தாலி கட்டாயமாக்கியுள்ளது. தனிப்பட்ட வீடுகள் தவிர வெளிப்புறத்தின் எல்லா இடங்களிலும் இத்தாலியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஏனைய நாடுகளை விடவும் இத்தாலியில் கொவிட்–19 சம்பவங்கள் குறைவாக இருந்தபோதும், தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முடக்க நிலை ஒன்றுக்கு திரும்புவதைத் தவிர்க்க கடும் நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்று இத்தாலி பிரதமர் கிசப்பே கொடே தெரிவித்துள்ளார்.

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.