பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்: சோபியா கெனின்- இகா ஸ்வியாடெக்

இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சோபியா கெனின் - இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். பிரெஞ்ச் பகிரங்க டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் (தரவரிசை 4) - செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா (தரவரிசை 7) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் சோபியா கெனின் 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசை பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் - அர்ஜென்டினாவின் நாடியாக பொடோரோஸ்கா மோதினர். இதில் இகா 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்றார். சோபியா கெனின் - இகா ஸ்வியாடெக் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Sat, 10/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை