புளோரிடாவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு முன்கூட்டியே ஆரம்பமாகியுள்ளது.

புளோரிடா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். அமெரிக்கச் சட்டத்தில், தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே மாநில அளவில் வாக்களிப்பை நடத்த அனுமதி உள்ளது.

27 ஜனாதிபதி மன்ற வாக்குகளைக் கொண்ட புளோரிடா மாநிலம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்புக்கு மிக முக்கியம் என்று கருதப்படுகிறது. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பதவியைத் தக்கவைத்துக்கொள்ள டிரம்புக்கு 270 ஜனாதிபதி மன்ற வாக்குகள் தேவை.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட புளோரிடா மாநிலத்தில் தோல்வியடைவது டிரம்பின் அரசியல் போட்டியாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. புளோரிடா மாநிலத்துக்குக் கடந்த வாரம் நேரில் சென்ற டிரம்ப், இந்த வாரம் வெள்ளிக்கிழமை மீண்டும் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

2016 ஜனாதிபதி தேர்தலில் பதிவான 136 மில்லியன் வாக்குகளில் சுமார் 20 வீத வாக்குகள் முன்கூட்டி பதிவானவையாகும். இம்முறை அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை