ஸ்பெயினில் கொரோனா மில்லியனைத் தொட்டது

முதலாவது மேற்கு ஐரோப்பிய நாடாக ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

அந்நாட்டில் கடந்த புதன்கிழமை 16,973 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 31 ஆம் திகதி முதல் கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயினில் மொத்த தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 1,005,295 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் ஆர்ஜன்டீனாவுக்கு அடுத்து ஒரு மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகும் உலகின் ஆறாவது நாடாகவும் ஸ்பெயின் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் கடந்த ஒரு சில மாதங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை