புதிய போர் நிறுத்தத்தையும் மீறியது அசர் – ஆர்மேனியா

அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா இடையே எட்டப்பட்ட மனிதாபிமான போர் நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பும் பரஸ்பரஸ் குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவுடன் இந்தப் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இரு தரப்பும் இணங்கின. எனினும் போர் நிறுத்தம் அமுலாகி வெறுமனே நான்கு நிமிடத்திற்குள் பீரங்கி மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி அசர்பைஜான் மீறியதாக ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டியது. ஆர்மேனியாவே அதனை மீறியதாக ஆசர்பைஜான் தொடர்ந்து குற்றம்சாட்டியது.

முன்னதான கடந்த வாரமும் ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் இந்த இரு நாடுகளும் யுத்த நிறுத்தம் ஒன்றில் கைச்சாத்திட்டபோதும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தன. அசர்பைஜான் நாட்டிற்குள் இருப்பதும் ஆர்மேனியர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுமான சர்ச்சைக்குரிய பிராந்தியம் தொடர்பிலேயே இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது. இந்த உக்கிர மோதல்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஆர்மேனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அசர்பைஜான் கூறியது.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை