அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விறுவிறுப்படைந்துள்ள பிரசாரம்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக, பென்சில்வேனியாவில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய மாநிலமாகக் கருதப்படும் அங்கு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் பிரசாரம் மேற்கொண்டார்.

இதுவரை 40 மில்லியனுக்கும் கூடுதலான அமெரிக்கர்கள் தேர்தலுக்கு முன்னதாக வாக்களித்துள்ளதாய் சி.என்.என் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்தது.

136 மில்லியன் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் அது 30 வீதமாகும்.

நாடு முழுவதும் நியூயோர்க் டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 9 புள்ளி வித்தியாசத்தில் பைடன் தற்போது முன்னணியில் இருப்பதாய்க் கூறியது.

பென்சில்வேனியா மாநிலத்தில் மட்டும், 4 புள்ளிக்குச் சற்று குறைவான வித்தியாசத்தில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

இரு வேட்பாளர்களும் கலந்துகொள்ளும் இரண்டாவது நேரடி விவாதம், புதிய அம்சங்களுடன் இன்று நடைபெறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை