ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி பேரெட்டை அந்நாட்டின் செனட் சபை உறுதி செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற ஒரு வாரமே இருக்கும் நிலையில் அந்தத் தெரிவு டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினரின் ஒருமித்த எதிர்ப்பையும் மீறி 4 வாக்குகள் வித்தியாசத்தில் ஏமியின் நியமனத்தை செனட் சபை அங்கீகரித்தது.

குடியரசுக் கட்சியினர் அவரை ஆதரித்து வாக்களித்தனர். 48 வயது ஏமி உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவரே உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், ஜனாதிபதி டிரம்ப் அந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை.

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை