பிரதமரின் அலுவலக பாதுகாப்பு பிரிவில் எவருக்கும் தொற்றில்லை

பொய்யான செய்திக்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் அலுவலகத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக பரவியுள்ள செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலக இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சேவையாற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவின் எந்தவொரு அதிகாரியும் கொவிட்---19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிபடுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லாததுடன், பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பிரிவொன்றின் அதிகாரியொருவரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதமர் பங்கேற்கும், வெளி நிகழ்வுகளின் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தயார்படுத்தல்களின் போது மாத்திரம் பங்கேற்கும் குறித்த அதிகாரி கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் சேவைக்கு சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை