போலந்து ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று உறுதி

போலந்து ஜனாதிபதி அன்ட்ரேஜ் டுடாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனினும் தாம் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

48 வயதான டுடாவுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை செய்துகொள்ளப்பட்ட சோதனையில் உறுதியானது.

இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட ஒருசில உலகத் தலைவர்கள் வரிசையில் டுடாவும் இணைந்துள்ளார்.

போலந்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதோடு கடந்த வெள்ளிக்கிழமை அங்கு சாதனை எண்ணிக்கையாக 13,600க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின.

அந்நாட்டில் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் உணவகங்கள் பகுதி அளவு மூடப்பட்ட நிலையில் தேசிய அளவில் முடக்க நிலை ஒன்றை நெருக்கு சிவப்பு வலயத்தை எட்டியுள்ளது.

டுடா எஸ்டோனிய தலைநகரில் நிகழ்வொன்றில் பங்கேற்றதோடு கடந்த திங்கட்கிழமை பல்கேரிய ஜனாதிபதி ரூமன் ரடெவ்வை சந்தித்தார். இந்நிலையில் அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவர் எஸ்டோனிய ஜனாதிபதி கெர்ஸ்டி கெல்ஜுலைட்டை சந்தித்தபோதும் அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

 

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை