ஜோகோவிச்சை எளிதாக வீழ்த்தி மகுடம் சூடினார் நடால்

கிராண்ட்ஸ்லம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 12 முறை சம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘களிமண் தரை கதாநாயகன்’ ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதினார்.

நடால் வேகத்திற்கு ஜோகோவிச்சால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் முதல் செட்டை நடால் 6-0 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஜோகோவிச் துவண்டு போனார். கண் மூடி திறப்பதற்குள் 6-2 என நடால் 2-வது செட்டை கைப்பற்றினார்.

3-வது செட்டில் ஜோகோவிச் சற்று நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் நடால் விடவில்லை.

இருவரும் மாறிமாறி கேம்-ஸை வென்றனர். இறுதியில் நடால் 7-5 என 3-வது செட்டை தனதாக்கினார்.

இதன் மூலம் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கண்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சம்பியன் பட்டம் வென்றார்.இதன்மூலம் நடால் 20-வது கிராண்ட்ஸ்லம் பட்டத்தை வென்று, அதிக கிராண்ட்ஸ்லம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். பிரெஞ்ச் பகிரங்கத்தில் இதற்கு முன் 7 முறை இருவரும் மோதி உள்ளனர்.

இதில் நடால் 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார்.நடால் பிரெஞ்ச் பகிரங்கத்தில் 13 வது தடவையாக அவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார் அந்த வருடங்களை பார்ப்போம் 2005,2006,2007,2008,2010,2011,2012,2013,2014,2017,2018,2019,2020.

Tue, 10/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை