ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 40ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சஞ்சு சம்சன் 36 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷித்கான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 155 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியினை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும், விஜய் சங்கர் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வீரர் மனிஷ் பாண்டே தெரிவுசெய்யப்பட்டார்.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை