சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவூதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கஷோக்கி கொல்லப்படும் முன்பு அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது பெண் தோழி ஹாடீஜா ஜெங்கிஸ் மற்றும் கஷோக்கி நிறுவிய ‘அரபு நாடுகளுக்கான ஜனநாயகம்’ எனும் அமைப்பு சார்பில் வொஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டவரான ஹாடீஜா தமக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது மனுவில் கூறியுள்ளார்.

கஷோக்கி கொலையால் தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘அரபு நாடுகளுக்கான ஜனநாயகம்’ அமைப்பு தெரிவித்துள்ளது. 59 வயதான ஜமால் கஷோக்கி 2017ஆம் ஆண்டில் தனது தாய் நாடான சவூதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். அவர் சவூதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்து வந்தார்.

Thu, 10/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை