வெனிசுவேலாவில் நாணய தாள்களுக்கு பற்றாக்குறை

வெனிசுவேலாவில் உயர் பணவீக்கம் நாட்டில் பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தி இருப்பதால் பெரிய தொகை கொண்ட நாணயத் தாள்களை அச்சிட காகிதங்களை அந்நாடு இறக்குமதி செய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலி அச்சு நிறுவனம் ஒன்றில் இருந்த வெனிசுவேலா இந்த ஆண்டில் சுமார் 71 தொன் காகிதங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன்மூலம் அந்நாடு 100,000 பொலிவர்கள் பெறுமதியான நாணயத் தாள்களை அச்சிடவுள்ளது.

இது வெனிசுவேலாவின் அதிக பெறுமதியான நாணயத்தாளாக அமையவுள்ளது. எனினும் இதன் மதிப்பு வெறுமனே 0.23 டொலர்கள் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. வெனிசுவேலாவில் கடந்த ஆண்டின் பணவீக்கம் 2,400 வீதம் வரை உச்சம் கண்டு அந்நாட்டின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி கண்டது. இதனால் சாதாரண மளிகைச் சாமான்கள் வாங்குவதற்குக் கூட பை நிறைய நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை