டிரம்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு ஒன்று இருப்பதாகவும் அங்கு பல ஆண்டுகளாக வர்த்தகத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

டிரம்பிற்கு சொந்தமான சர்வதேச ஹொட்டல் முகாமைத்துவத்தின் மூலம் கையாளப்படும் அந்த வங்கிக் கணக்கில் 2013 தொடக்கம் 2015 வரை சீனா நாட்டுக்கு வரி செலுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசியாவில் ஓட்டல் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக டிரம்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வணிகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களை டிரம்ப் விமர்சித்து வந்தார் என்பதும், இரு நாடுகளுக்கும் இடையில் வணிக மோதலைத் ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் செலுத்திய வரிகள் குறித்த ஆவணங்களைப் பெற்ற பின்னர் இந்த வங்கிக் கணக்கு விவரத்தை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகை வசமுள்ள ஆவணங்களில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன.

Thu, 10/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை