அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்கூட்டி வாக்களித்தார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்த 56 மில்லியன் பேரில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இணைந்து கொண்டார். அவர் கடந்த சனிக்கிழமை புளோரிடாவில் தனது வாக்கை அளித்தார்.

வாக்குச்செலுத்தும் வரை முகக்கவசம் அணிந்திருந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் நெருங்கியதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “டிரம்ப் என பெயர் வைத்திருந்த ஒரு நபருக்கு வாக்கு செலுத்தினேன்” என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தை திவிரப்படுத்தியுள்ளார். மூன்று முக்கிய மாநிலங்களில் அவர் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

எனினும் கருத்துக் கணிப்புகளின்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். அவர் முக்கிய மாநிலங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பிரசாரத்தை நடத்தியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை பெற்றபோதும் குடியரசு கட்சியின் டிரம்ப் கூட்டம் நிறைந்த தேர்தல் பேரணிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக இந்தத் தேர்தலில் தீர்கமான பிராந்தியமான மிட்வெஸ்டில் நோய்த் தொற்று தீவிரம் அடைந்துள்ளது.

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை