உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் மாபெரும் வீதி விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் மருதமுனை பிரதேச வைத்தியசாலை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த வீதி விழிப்புணர்வு சைக்கில் ஓட்டம், மெல்லோட்டம் மற்றும் நடைபவணி என்பன (29.09.2020) மருதமுனை தொடக்கம் காரைதீவு வரைக்கும் நடைபெற்றது.

தொற்றா நோய் காரணமாகவே உலகில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதற்கு இருதய நோய்கள் பிரதான காரணமாக விளங்குகின்றது. இதிலிருந்து தவிர்ந்து கொள்ள ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களும் சிறந்த உடற்பயிற்சியும் முக்கியமானதாகும். நாளொன்றுக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது கட்டாயமானதாகும். இது போன்ற விழிப்புணர்வுகளை பிரதேச மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் இந்த வீதி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை