புத்தளம் சாஹிராவில் பயிற்சிகள் மீள ஆரம்பம்

கொவிட் 19 கெடுபிடி தளர்த்தப்பட்டு மீண்டும் வழமை போல பாடசாலைகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் வார இறுதி நாட்களில் மாணவர்களின் பயிற்சிக்காக கால்ப்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

கொவிட் 19 கெடுபிடியுடன் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகள் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு ஏற்ப இடை நிறுத்தப்பட்டு இருந்தது. எனினும் கொவிட் 19 கெடுபிடி தளர்த்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ன.

பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூனின் வழிப்படுத்தலில் பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

சனிக்கிழமையன்று (26) மீள ஆரம்பிக்கப்பட்ட முதல்நாள் பயிற்சியில் 12 வயதின் கீழ் 14 வயதின் கீழ் பிரிவை சேர்ந்த 45 மாணவர்கள் வருகை தந்திருந்தனர். 'பந்தை உதைத்தல்' என்ற திறன் இதன்போது கற்பிக்கப்பட்டது. காலை 6.30 - 8.30 வரை பயிற்சிகள் இடம்பெற்றன.

பெற்றோர்கள் மீண்டும் பிள்ளைகளை இணைப் பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு ஊக்கப்படுத்துதல் பயனுடையதாகும். இச் செயற்பாடுகள் மாணவர்களின் உடல், உள ஆற்றலையும் விருத்தியும் மேம்படுத்துகிறது.

புத்தளம் தினகரன் நிருபர்

Sat, 10/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை