Header Ads

சர்வதேச போட்டிகளில் டிவில்லியர்ஸ் ஆடவேண்டும்

டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார். உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆபிரிக்காவை சேர்ந்த இவர் 2018-ல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

36 வயதான டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக அண்மையில் நடந்த ஆட்டத்தில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர் ஒருவரால் மட்டுமே அதிரடியாக ஆட முடிந்தது.

இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக டிவில்லியர்ஸின் ஆட்டம் அற்புதமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இதை பார்க்கும்போது கனவா? நினைவா? என்று எண்ண தோன்றியது என்றார்.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.