உலக சாதனை படைத்த உகாண்டா வீரர்

10 ஆயிரம் மீ்ற்றர் பிரிவில்

ஸ்பெயினில் நடந்த தடகள போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் பிரிவில் உகாண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினின் வேலன்சியா நகரில் துரியா ஸ்டேடியத்தில் நடந்த தடகள போட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இவற்றில் விளம்பரதாரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்த தடகள போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் பிரிவில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (வயது 24) கலந்து கொண்டு 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை ஜோசுவா முறியடித்து உள்ளார்.

அவர் கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த உலக சம்பியன்சிப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். கடந்த ஆகஸ்டில் மொனாக்கோ நகரில் நடந்த டயமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீற்றர் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். இவை தவிர்த்து, கடந்த டிசம்பரில் வேலன்சியா நகரில் நடந்த 10 கிலோ மீற்றர் ரேசிங் பிரிவில் கலந்து கொண்டு இலக்கை அடைந்து, 6 வினாடிகள் வித்தியாசத்தில் 10 ஆண்டு கால சாதனையை ஜோசுவா முறியடித்திருக்கிறார். இதேபோன்று மகளிர் பிரிவு 5 ஆயிரம் மீற்றர் தடகள போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை லெடிசென்பெட் கிடி (வயது 22) பந்தய தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலக சாதனையை படைத்துள்ளார்.

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை