கண்ணீர்விட்டு அழுத வடகொரிய தலைவர்

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் இராணுவ அணிவகுப்பு விழாவின்போது கண் கலங்கினார்.

தாய்நாட்டுக்காகப் பல தியாகங்களைச் செய்த வீரர்களுக்கு நன்றி கூறியும், குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தவறியதற்கு வருத்தம் தெரிவித்தும் கிம் கண்ணீர் விட்டார்.

வட கொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக்கொண்டாடும் வகையில், கடந்த 10ஆம் திகதி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அதில் கிம், அண்மையில் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வர உதவியதற்கும், கொரோனா வைரஸை நாட்டிற்குள் நுழையவிடாமல் கட்டுப்படுத்தியதற்கும் இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார். தமக்கும், தாம் எடுக்கும் முடிவுகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் வட கொரியர்களுக்குத் தமது நன்றிகள் போதுமானவை அல்ல என்றும் கிம் குறிப்பிட்டார்.

வட கொரியாவில் வைரஸ் தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை