அனைத்து சிறைகளிலும் கைதிகளை பார்வையிட தடை

நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் கைதிகளை பார்வையிடுவதற்காக உறவினர்கள்  வருகை தருவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக வருகை தரும் உறவினர்கள் நேற்று (04) முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நேற்று பகல் முதல் திவுலபிட்டி மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (05) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் உறவினர்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Mon, 10/05/2020 - 15:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை