பொலிஸ் சூட்டில் மற்றொரு கறுப்பின இளைஞன் பலி

பிளடெல்பியாவில் பதற்றம்

அமெரிக்காவின் பிளடெல்பியா மாநிலத்தில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து நீதி கேட்டு இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 27 வயதான வோல்டர் வொல்லஸ் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞன் வைத்திருந்த கத்தியை கீழே போட மறுத்ததை அடுத்தே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸார் மற்றும் தேசிய காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். முதல் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 30 பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதற்றத்திற்கு இடையே ஆர்ப்பாட்டக்காரர்கள் வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் வொல்லஸ் மீது சூடு நடத்துவதற்கு முன்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அவரது மனைவி அந்த பொலிஸாரிடம் கூறி இருந்ததாக அந்த இளைஞனின் குடும்பத்தினர் சார்பான வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் பிடியில் இருந்த ஜோர்ஜ் பிளொயிட் என்ற கறுப்பினத்தவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிளடெல்பியாவின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை