Header Ads

ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்காவில் முழு ஒப்புதல்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க, அமெரிக்கா முழு ஒப்புதல் அளித்துள்ளது.

இம்மருந்து நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படவுள்ளது.

கடந்த மே மாதம் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.