ஒக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர் மரணம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற ஒரு தன்னார்வலர் பிரேசிலில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி சோதனைகளில் நடந்துள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும்.

மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனையில் இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முன்னணியில் இருந்து வருகிறது. ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரேசிலின் ரியோ டிஜெனிரோவைச் சேர்ந்த மருத்துவர் ஜோனோ பீடோசா (28) என்ற தன்னார்வலர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மருத்துவ தன்னார்வலராக இருந்தாலும், தடுப்பூசி மருத்துவ பரிசோதனை தொடரும் என்றும் எந்தவொரு பாதுகாப்பு கவலையும் இல்லை என்று ஆய்வு செய்துள்ளதாகவும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவன ஆய்வின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை