Header Ads

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி

இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய்க் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

எனினும் பிஸ்டாச்சியோ–பிஸ்தா என்று பெயரிடப்பட்ட அந்த பச்சை நாய்க்குட்டியின் வண்ண உரோமம் நீண்ட காலம் நீடிக்காது.

பிறக்கும்போது பிரகாசமாய் இருந்த பச்சை, நாள் செல்லச்செல்ல வெளுத்து வருகிறது. அது தொடர்ந்து வெளுக்கும் எனக் கூறப்படுகிறது.

பச்சை நிறம் அதிர்ஷ்டத்துக்கும் நம்பிக்கைக்குமான சின்னம். அதனால், அந்த நாயின் வருகை பலருக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது என்று அதன் உரிமையாளரான மல்லோக்கி கூறினார்.

பச்சை நிற உரோமத்துடன் நாய்க்குட்டி பிறப்பது மிகவும் அரிது.

தாயின் கருவில் இருக்கும்போது பித்தப்பசும்பசை என்ற பச்சை நிறமியுடன் தொடர்பு ஏற்பட்டால், குட்டிகள் பச்சை உரோமத்துடன் பிறக்கும். காயங்கள் ஏற்பட்ட இடம் பச்சையாக மாறுவதற்கும் அதே நிறமிதான் காரணம்.

 

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.