சம்சுங் நிறுவன தலைவர் லீ குன்-ஹீ காலமானார்

சம்சுங் எலக்ட்ரோனிக் நிறுவனத் தலைவர் லீ குன்–ஹீ நேற்று தனது 78 ஆவது வயதில் காலமானார்.

தென் கொரிய நிறுவனமான சம்சுங்கை உலக அளவில் பிரபலமடையச் செய்த முக்கிய நபர்களில் லீயும் ஒருவராவார்.

2014ஆம் ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் படுத்த படுக்கையானார். லீயின் மறைவு குறித்து சம்சுங் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.

“ லீ ஒரு உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்டவர், உள்நாட்டு நிறுவனமாக இருந்த சம்சுங் நிறுவனத்தை, உலகின் முன்னணி நிறுவனமாகவும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் மையமாகவும் மாற்றியவர்” என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

2017ஆம் ஆண்டு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட சில குற்றச் செயல்களுக்காகத் லீக்கு 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் ஓராண்டில் சிறையிலிருந்து வெளியேறினார்.  

 

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை