புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பதா? இல்லையா?

விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2020 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா இல்லையா என்பது தொடர்பான முடிவை ஓரிருதினங்களில் அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.எந்த முடிவும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து சிந்தித்தே எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.  கொரோனா வைரஸ் தாம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 2 ஆம் தவணை விடுமுறை அளிக்கப்பட்டதுடன் கொழும்பு மாவட்டத்திலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு கல்வி அமைச்சு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு மற்றும் பரீட்சைகளுக்கான புதிய திகதி குறித்து கலந்துரையாடி முடிவு செய்யப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் அதே நேரத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நவம்பர் 06 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,11 ஆம் திகதி நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் 3,31,694 மாணவர்களும் உயர்தரப் பரீட்சையில் 3,62,824 மாணவர்களும் தோற்ற உள்ளனர்.

பரீட்சை ஏற்கெனவே தாமதிக்கப்பட்டது.இந்த நிலையில் அவர்கள் 12 மாதங்களாக கஷ்டப்பட்டு தயாராகியுள்ளனர்.பரீட்சை தொடர்பில் பெற்றோரும் மாணவர்களும் கரிசனையாக உள்ளனர்.

எந்த முடிவு எடுத்டதாலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து சிந்தித்தே செயற்பட வேண்டும். பரீட்சை நடத்துவதாக இருந்தால் வௌ்ளிக்கிழமைக்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் விண்ணப்பமொன்றை வழங்கி முழு தகவலும் திரட்ட வேண்டும்.முகக் கவசம் ,கைகழுவுதல் ,சமூக இடைவௌி என்பவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

துரிதமாக பரீட்சை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.(பா)

Tue, 10/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை