சிரிய அரச படை சுற்றிவளைத்த பகுதியில் இருந்து துருக்கி வாபஸ்

வட மேற்கு சிரியாவில் உள்ள துருக்கியின் மிகப்பெரிய இராணுவ முகாமை அரச படை சுற்றிவளைத்திருக்கும் நிலையில் துருக்கி அங்கிருந்து வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது.

சிரியாவின் வடமேற்கு மாகாணமான ஹமாவின் மோரெக் பகுதியிலேயே துருக்கியின் இந்த இராணுவ முகம் உள்ளது. எனினும் அந்தப் பிரதேசத்தின் பெரும்பகுதி சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரச படை கடந்த ஆண்டு முன்னெடுத்த படை நடவடிக்கையின்போது இந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இங்கிருந்து வாபஸ் பெறும் துருக்கி துருப்புகள் இத்லிப் புறக்காவல் பகுதியில் நிலைநிறுத்தப்படவுள்ளதாக துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சித் தளபதி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

சிரிய அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதோடு, அதன் வடக்கு எல்லையை ஒட்டி இருக்கும் சிரிய பகுதிகளில் பல இராணுவ நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. கடந்த 2018 செப்டெம்பர் தொடக்கம் துருக்கி வடமேற்கு சிரியாவில் 12 கண்காணிப்பு முகாம்களை நிறுவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை