மூளை திண்ணும் நுண்ணுயிரியை ஒழிப்பதற்கு அமெரிக்கா போராட்டம்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் ஜாக்சன் ஏரியில் உள்ள பொதுக் குடிநீர் கட்டமைப்பில் மூளை தின்னும் நுண்ணுயிரியை துடைத்தொழிக்க சில மாதங்கள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அந்த ஒற்றை நுண்ணுயிரியால் டெக்சஸில் 6 வயதுச் சிறுவன் உயிரிழந்தான். நீரிலிருந்து நுண்ணுயிரியை அகற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் கிரேக் அபோட் தெரிவித்தார்.

அதற்கிடையில் ஏரியிலிருந்து வரும் குடிநீரை நன்கு கொதிக்க வைத்துப் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர்க் கட்டமைப்பில் எப்படி நுண்ணுயிரி வந்தது என்பது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நுண்ணுயிரியால் மூளைத்தொற்று ஏற்படுவது மிகவும் அரிது என்று அதிகாரிகள் கூறினர். நீரை நேரடியாகக் குடிப்பதாலும், அதில் குளிப்பதாலும் மூளைத்தொற்று ஏற்படாது என்று அவர்கள் உறுதியளித்தனர்.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை