பொத்துவில் வொண்டர்ஸ் அணி சம்பியன்

தேசிய காங்கிரஸின் பொத்துவில் இளம் பரிகள் அமைப்பின், விளையாட்டுப் பிரிவினால் நடாத்தப்பட்ட ”லீடர் சம்பியன் கிண்ணம் - 2020” கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் வொண்டர்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

மேற்படி கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஆசிரியர் எம்.ஐ.சபூர்டீன் தலைமையில், அண்மையில் பொத்துவில் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் பொத்துவில் றபா மற்றும் பொத்துவில் வொண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இதன்போது நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற றபா அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர். அதற்கினங்க முதலில் துடுப்பெடுத்தாடிய வொண்டர்ஸ் அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்களில் 4விக்கட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். வொண்டர்ஸ் அணி சார்பாக பாறுக் 25ஓட்டங்களையும், கியாஸ் 23ஓட்டங்களையும் அந்த அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

79ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய றபா அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்களில் 9விக்கட்டுக்களை இழந்து, 60ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவிக்கொண்டனர். றபா அணி சார்பாக, றிசான் 21ஓட்டங்களை அந்த அணிக்காக பெற்றக்கொடுத்தார்.

இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இதன்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் எம்.எஸ்.எம்.அன்ஸார், தொழிலதிபர் ரஊப், பொத்துவில் தேசிய பாடசாலையின் அதிபர் கே.ஹம்ஸா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பிரதி அதிபர்களான ஏ.எல்.அப்துல் பாரி மற்றும் என்.ரீ.முபாரக் அலி, தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச கொள்கைபரப்புச் செயலாளர் எம்.எஸ்.முபாரக் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தினை பெற்றுக்கொண்ட வொண்டர்ஸ் அணி மற்றும் இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்ட றபா அணியினருக்குரிய கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசில்களை அதிதிகள் வழங்கி வைத்தனர். அத்துடன் இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்திய கழகங்களின் வீரர்களும் இதன்போது அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானத்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கில், தேசிய காங்கிரஸின் பொத்துவில் இளம் பரிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட 36 முன்னனிக் கழகங்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை விசேட நிருபர்

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை