எர்துவான் அவமதிப்புப் பேச்சு: தூதுவரை அழைத்தது பிரான்ஸ்

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் கருத்துக் கூறியதை அடுத்து பிரான்ஸ் துருக்கிக்கான தனது தூதுவரை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்தின் மீதான மெக்ரோனின் செயற்பாடுகள் காரணமாக ‘அவரது மனநலத்தை’ சோதிக்க வேண்டும் என்று எர்துவான் குறிப்பிட்டிருந்தார்.

பிரான்ஸில் இருக்கும் சில முஸ்லிம் சமூகங்களை கட்டுப்படுத்தும் இஸ்லாமியவாத பிரிவினைவாதிகளுக்கு எதிராக போராடுவதாக மெக்ரோன் கூறிய கருத்துத் தொடர்பிலேயே எர்துவான் கடும் விமர்சனத்தை வெளியிட்டார்.

பிரான்ஸில் இறைத்தூதர் தொடர்பிலான சர்ச்சைகுரிய கேலிச்சித்திரம் ஒன்றை மாணவர்களிடம் காண்பித்த ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே மெக்ரோன் இவ்வாறு கூறியிருந்தார்.

“மெக்ரோன் என்ற அந்த நபருக்கு முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது என்ன பிரச்சினை? மெக்ரோன் தனது மனநலத்தை சோதிக்க வேண்டும்” என்று தனது நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

நேட்டோ உறுப்பு நாடுகளான பிரான்ஸ் மற்றும் துருக்கிக்கு இடையே பல அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அண்மைக் காலமாக முறுகல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை