தேசிய மருந்து உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க கைத்தொழில் அமைச்சரால் குழு

தேசிய மருந்து உற்பத்தியாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் சந்தைவாய்ப்பை பெற தேவையான வழிகாட்டல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் கைத்தொழில் அமைச்சினதும் இலங்கை தொழிற்துறை அபிவிருத்தி சபையின் அதிகாரிகளையும் கொண்ட குழுவொன்றை அமைக்க கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேற்று (19) கொழும்பில் அமைந்துள்ள கைத்தொழில் அமைச்சில் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராம ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக சுதேச வைத்திய முறைகளில் மக்கள் அக்கறை காட்டுவதால் சுதேச வைத்திய முறையை பிரபலப்படுத்த அதன் மூலம் வழியேற்பட்டுள்ளது. அதனால் அதனை ஊக்குவிக்கும் முகமாக இக்கலந்துரையாடல் நடைபெறுவதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சுதேச மருந்து உற்பததியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை என்னவென்றால் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வது மற்றும் அவற்றை இறக்குமதி செய்வதுமேயாகுமென அவர் தெரிவித்தார்.

உள்ளூர் கண்டுபிடிக்கப்படும் மூலப்பொருட்களை தேவையான தரத்திற்கு தயாரிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொடுக்க தலையிடுமாறு ராஜாங்க அமைச்சர் கைததொழில் அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்ததோடு இலங்கை தொழில் அபிவிருத்தி சபைக்கு தனது ஒத்துழைப்பை அதற்காக வழங்க முடியுமென அங்கு வருகை தந்திருந்த இலங்கை தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் உபசேன திஸாநாயக்க கூறினார்.

சுற்றுலா துறையை இலக்காகக்கொண்டு உல்லாசப்பயண ஹோட்டல்களில் சுதேச வைத்திய முறைகளை பிரபலப்படுத்த உள்ள சந்தர்ப்பம் குறித்தும் இங்கு உரையாடப்பட்டது. சுதேச மருந்து உற்பத்தியாளர்களுக்கு தேவையான பொதியிடும் உபகரணங்களை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யக்கூடிய வழிவகைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அதற்கான நடவடிக்கைகயை ஆரம்பிக்கும்படியும், எதிர்காலத்தில் முழுமையான அதிகாரமுள்ள குழுவொன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக் கலந்துரையாடலில் சுதேச வைத்திய ஊக்குவிப்பு, கிராம ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார ராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி விரசேகர, மருந்து உற்பத்தி ஆலோசகர் சபையின் தலைவர் சாலுக்க அதாவுத, இலங்கை தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் உபசேன திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை