எப்.எஸ்.சி அணி சம்பியன்

அக்கரைப்பற்று குடும்ப விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மர்ஹும் முஸ்தபா பஹத் 2020 வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று எப்.எஸ்.சி.அணியினர் வெற்றி பெற்றனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 11 முன்னணிக் கழகங்கள் கலந்து கொண்ட இச்சுற்றுப்போடடியின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் முஸ்தபா நிஹால் தலைமையில் நடைபெற்றது.

விலகல் அடிப்படையில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் பள்ளிக்குடியிருப்பு முஹம்மதியா விளையாட்டுக் கழகத்தினரும்,அக்கரைப்பற்று எப்.எஸ்.சி.அணியினரும் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடினர்.இதில் குறிப்பிட்ட நேரம் வரையும் இரு அணிகளும் விறுவிறுப்புடன் விளையாடியதில் 4 - 1 என்ற கோல் அடிப்படையில் அக்கரைப்பற்று எப்.எஸ்.சி.அணியினர் வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவாகினர்.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக எப்.எஸ்.சி அணியின் அப்லலும்,போட்டித் தொடரின் சிறந்த வீரராக முஹம்மதியா அணியின் சஜீரும் சிறந்த கோல்காப்பாளராக எப்.எஸ்.சி அணியின் இன்சாமும் தெரிவு செய்யப்பட்டு அதிதிகளினால் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற எப்.எஸ்.சி.அணித்தலைவரிடம் வெற்றிக்கிண்ணத்துடன் ரூபா 20ஆயிரம் காசோலையினை நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினர் அஸ்மி அப்துல்கபூர் மற்றும் அக்கரைப்பற்று குடும்ப விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் ஏ.பீ.எம்.முஸ்தபாவும் வழங்கி வைத்தனர்.

இரண்டாமிடம் பெற்ற முஹம்மதியா கழக அணித்தலைவரிடம் கிண்ணத்துடன் 10ஆயிரம் ரூபா காசோலையினையும் தொழிலதிபர் முஹம்மட் பசீத் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்வர் சதாத் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித்தலைவர் ஏ.எம்.சுல்பிகார்,அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழகங்ளின் சம்மேளனத்தலைவர் ஹம்சாசனுாஸ், அக்கரைப்பற்று குடும்ப விளையாட்டுக் கழகத்தின்தலைவர் முஸ்தபா நிஹார் விளையாட்டுக் கழகத்தின் பதவி வழி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை