பார்சிலோனா, ரியல் மெட்ரிட் அணிகள் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயினின் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, ரியல் மெட்ரிட் அணிகள் அதிர்ச்சித் தோல்வி அடைந்தன.

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் ஆரம்பமாகி நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முன்னாள் சம்பியனான பார்சிலோனா கடந்த சனிக்கிழமை நடந்த கெடாபி கழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் 0–1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

56ஆவது நிமிடத்தில் கெடாபி வீரர் ஜெமி மாட்டா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். பார்சிலோனா முன்னணி வீரர்கள் லியோனல் மெஸ்சி, கிரிஸ்மான் நெருங்கி வந்து சில வாய்ப்புகளை கோட்டை விட்டனர்.

இந்தப் பருவத்தில் பார்சிலோனா அணியின் முதல் தோல்வி இதுவாகும். இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு சமநிலை, ஒரு தோல்வி என்று 7 புள்ளியுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. இதேபோன்று நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி 0–1 என்ற கோல் கணக்கில் சிறிய அணியான கேடிஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. கேடிஸ் வீரர் அந்தோணி லோஜனோ 16ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். கேடிஸ் அணி 29 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக ரியல் மெட்ரிட்டை வீழ்த்தியுள்ளது.

ரியல் மெட்ரிட், கெடாபி, கேடிஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை