கொரோனா தொற்றின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

அமைச்சர் நாமல் தெரிவிப்பு

மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்றின் தீவிரத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ, சுககாதார அமைச்சு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து பீதியடைய வேண்டாம் என்றும் ​கோரியுள்ளார். மேலும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் பொது மக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். திவுலபிடிய பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளது.

இதன் பின்னர் திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை