வயல் நிலங்களை நிரப்ப அரசு ஒருபோதும் இடமளிக்காது

அமைச்சர் மஹிந்தானந்த திட்டவட்டம்

வயல் நிலங்களை நிரப்பி வேறு செயற்பாடுகளுக்காக உபயோகிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது. அரசாங்கம் அதனை கொள்கை ரீதியாக முன்னெடுத்து வருவதாக விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முரணாக செயற்படும் அதிகாரிகள்தொடர்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது புத்திக்க பத்திரன எம்.பி.எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வயல் நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தியுள்ள பெருமளவு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எமது அரசாங்கம் வயல் நிலங்களை வேறு பயன்பாட்டுக்காக உபயோகிப்பது தொடர்பில் கடுமையான கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. தனிப்பட்ட ரீதியில் விவசாய அமைச்சர் என்ற வகையில் நான் அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானவன் என தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம் 

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை