வில்லியர்ஸின் அதிரடியில் வெற்றியை சுவீகரித்தது பெங்களூர்

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (சனிக்கிழமை) நடைபெற்றது.

இப்போட்டயில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் உத்தப்பா மற்றும் சுமித் ஆகிய வீரர்கள் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர். ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்க்ள நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பாக, ஸ்டீவன் சுமித் ஒரு ஆறு ஓட்டம், 06 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், உத்தப்பா ஒரு ஆறு ஓட்டம், 07 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். மேலும், ஜொஸ் பட்லர் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் பெங்களூர் அணி சார்பாக, கிரிஸ் மொரிஸ் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் சாகல் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், பதிலுக்கு 178 ஓட்டங்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணிசார்பாக, ஏ.பி. டி வில்லியர்ஸ் 06 ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டம் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அத்துடன், அணித்தலைவர் விராட் கோஹ்லி 43 ஓட்டங்களையும், தேவ்டுற் படிக்கல்35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக, ஸ்ரேயஸ் கோபால், கார்த்தின் தியாகி மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஏ.பி. டி வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில், புள்ளிகள் அட்டவணையில் பெங்களூர் றோயல் சலெஞ்சர்ஸ் அணி ஒன்பது போட்டிகளில் ஆறில் வெற்றி, மூன்றில் தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது நிலையில் உள்ளது.

அதேபோல் ராஜஸ்தான் அணி, ஒன்பது போட்டிகளில் மூன்றில் வெற்றி, ஆறில் தோல்வியுடன் ஆறு புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை